#Covid19

LatestNews

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் அரசாங்கத்தின் முக்கிய வேண்டுகோள்!!

இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு உதவிகளை வழங்குமாறு வெளிநாட்டு வாழ் இலங்கையார்களிடம் இராஜாங்க அமைச்சரும், விசேட வைத்திய நிபுணருமான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுடனான உரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டின் வைத்தியசாலைகளில் வைத்திய உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுவதால் அவற்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More
LatestNews

முடங்குகிறது நாடு- வெளியான முக்கிய அறிவிப்பு!!

நாட்டில் தற்போது கட்டுக்கடங்காது அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பபட்டுள்ளது. அதனடிப்படையில், இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் Read More

Read More
LatestNews

அரச ஊழியர்கள் சம்பளத்தின் பாதியை விட்டுக்கொடுத்தால் நாட்டை முடக்கத் தயார் – இராஜாங்க அமைச்சர் தகவல்!!

இலங்கையை முழுமையாக இரண்டு வாரங்கள் முடக்க வேண்டுமாயின் அரச ஊழியர்கள் தங்களது மாதாந்த சம்பளத்தில் சரிபாதியை அரசாங்கத்திற்கு அன்பளிப்பு செய்ய வேண்டும் என தேசிய வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். நாட்டை முடக்குமாறு முன்வைக்கப்படும் கோரிக்கை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், “ஒவ்வொரு தரப்பினரும் நாட்டை மூடுமாறு யோசனை முன்வைக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அனைத்து அரச ஊழியர்களும் மாத சம்பளத்தில் சரிபாதியை விட்டுக் Read More

Read More
LatestNews

பல எதிர்பார்ப்புகளுடன் கோட்டாபயவின் விசேட உரை!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், ஜனாதிபதி இன்றைய தினம் உரையாற்றவுள்ளார். முன்னதாக சுகாதார பிரிவினர், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள், மல்பத்து பீடம், எதிர் கட்சிகள் என்பன பல தடவை நாட்டை முடக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தநிலையில், ஜனாதிபதியின் விசேட உரை இன்று இடம்பெறவுள்ளமை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More
LatestNews

வவுனியாவில் கிராமம் ஒன்றில் அதிகளவில் இனம் காணப்பட்ட தொற்றாளர்கள்- உடனடி முடக்கம்!!

வவுனியா புளியங்குளம் கல்மடு கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்ரியன் பரிசோதனையில் 13 பேர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து குறித்த கிராமம் பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. கல்மடு கிராமத்தில் சிலருக்கு காய்ச்சல் இருப்பதாக வவுனியா வடக்கு சுகாதார பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் எழுமாறாக அன்ரியன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதிலே கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து குறித்த கிராமம் பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதுடன், பொலிசார் பாதுகாப்பு கடைமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் புளியங்குளம் கல்மடு Read More

Read More
LatestNews

வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கு மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் சுமித் அலகக்கோன் இதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மோட்டார் வாகன திணைக்களத்தின் பிரதான காரியாலங்களும், பிரதேச அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான கால இடைவெளியில் சாரதி அனுமதிப்பத்திரங்கள் நிறைவடைந்த காலத்தில் இருந்து Read More

Read More
LatestNews

இலங்கை முழுவதும் 209 மருத்துவர்களுக்கு கொரோனா! பலர் அவசர சிகிச்சைப்பிரிவில்!!

நாடளாவிய ரீதியில் 209 மருத்துவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது 30 – 40 மருத்துவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒரு மருத்துவர் அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை, கொரோனா வைரஸ் பாதிப்பால் மூன்று மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கேகாலை பொது சுகாதார ஆய்வாளர் மற்றும் ராகம மருத்துவமனையின் இரண்டு மருத்துவர்கள் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் Read More

Read More
LatestNews

இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் கொரோனா!!

சிறுவர்கள் மத்தியில் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜே.விஜேசூரியா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாளாந்தம் சுமார் 25 சிறுவர்கள் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார். இதேவேளை, பெற்றோர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டாலும் கூட, தமது குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Read More
LatestNews

உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயரதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு!!

எந்தளவு கொரோனா தொற்று நோயாளிகளை வைத்தியசாலைகளில் தங்க வைக்க முடியுமென்பது தொடர்பில் முழு விபரங்களுடனான அறிக்கையொன்றை உடனடியாக தமக்குப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதாரத்துறை உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலேயே இது தொடர்பில் ஜனாதிபதி முழுமையான அறிக்கையை கோரியுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு Read More

Read More
LatestNews

இன்று நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று  நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா பரவல், நாட்டின் பொருளாதாரம் மற்றும் நாட்டை முடக்குவதில் உள்ள சிக்கல் நிலை என்பன தொடர்பில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம், ஜனாதிபதி நாளைய தினம் கண்டிக்கு சென்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்க தேரர்களை சந்தித்து, நாட்டின் நிலைமை குறித்து தெளிவுபடுத்த உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும், ஜனாதிபதி, நாட்டு Read More

Read More