எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4 மணி வரை நீடிக்கப்பட்ட்து ஊரடங்கு உத்தரவு!!

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 4 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஜனாதிபதியின் ஊடகசெயலாளர் மற்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோர் தமது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.   ஜனாதிபதியின் ஊடகசெயலாளரின் Twitter பதிவை பார்வையிட இங்கே Click செய்யவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் Twitter பதிவை பார்வையிட இங்கே Click செய்யவும்   எதிர்வரும் திங்கட் கிழமை  தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு உத்தரவு, வேகமாக Read More

Read more

நாட்டில் 60 சதவீதமானோருக்கு முதல் Dose, 40 சதவீதமானோருக்கு இரண்டாவது Dose Covid-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!!

இலங்கையில் மொத்த சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாவது தடுப்பூசி 40 சதவீதமானோருக்கு ஏற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு மாநகரசபை எல்லைப்பகுதிக்குள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கடந்த 6ஆம் திகதி ஆரம்பமானது. இதற்கமைவாக ,கொழும்பு சுகததாச உள்ளக அரங்கு, ஜிந்துப்பிட்டி பொதுச் சுகாதார அலுவலகம், போர்ப்ஸ் வீதி சனசமூக நிலையம், கெம்பல் பார்க், சாலிகா மைதானம், ரொக்ஸி கார்டின் ஆகிய இடங்களில் இன்றைய தினம் Read More

Read more

தனக்கு தானே தீ வைத்த நபர்…. கொழும்பில் சம்பவம்!!

கொழும்பு – கறுவாத்தோட்டம் பகுதியில் நபரொருவர், தனக்கு தானே தீ வைத்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் கறுவாத்தோட்டம் பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றுக்கு முன்பாக நேற்று மாலை இடம்பெற்றதாகவும் கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீ வைத்துக்கொண்ட நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் தீ காயங்களுக்கு உள்ளான நபரின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். குறித்த நபர் தீ வைத்துக்கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை Read More

Read more

2 Dose Sinopharm பெற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மூன்றாவது Dose Moderna /Pfizer /AstraZeneca!!

2 சைனோபாம் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர், எஸ்ட்ரா செனேகா அல்லது மொடர்னா தடுப்பூசிகளை வழங்குவது அவசியம் என்று விசேட மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை, 20 – 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்துவது முறையற்றதெனவும் அது விஞ்ஞானபூர்வ தரவுகளை மீறும் செயற்பாடு என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுப்பவர்கள் அதற்காக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் நிபுணர்கள் குழு, உலக Read More

Read more

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமலும் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும்…. விசேட வைத்தியர் கூறுகின்றார்!!

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமலும் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும் என ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், இதற்கிடையில், கொரோனா பரிசோதனைகள் குறைவடைந்துள்ளமையினாலேயே கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியிருந்தன. வீடுகளில் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் திட்டத்தின் கீழ் 52,361 பேர் அமர்த்தப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 37,448 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் Read More

Read more

இடுப்பு வலி பரிசோதனை செய்ய சென்ற இளைஞன் – மருத்துவருக்கு முன்பாக விழுந்து மரணம்… காரணம் Covid-19!!

இளைஞன் ஒருவன் மருத்துவருக்கு முன்பாகவே விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. கண்டி குண்டசாலை மஹமெவ்னா என்ற பிரதேசத்தில் உள்ள கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு இடுப்பு வலி காரணமாக பரிசோதனை செய்துகொள்ளச் சென்ற இளைஞன் மருத்துவருக்கு முன்பாகவே விழுந்து உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்த இளைஞனுக்கு 25 வயது என தெரிவிக்கப்படுகிறது. பின்னர் நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் கண்டி கட்டுகஸ்தோட்டையை சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது.

Read more

18 – 30 வயதினருக்கு தடுப்பூசி…. திட்டம் ஆரம்பம் – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!!

18 – 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (02) அறிவித்தார். இந்த தடுப்பூசி திட்டம் மாவட்ட அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கூறினார். 18 – 30 வயதுக்குட்பட்ட 3.7 மில்லியன் பேருக்கு இந்த தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், இந்த வயதுக் குழுவில் உள்ள முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 18 – 30 வயதுக்குட்பட்ட சில Read More

Read more

“நாட்டில் உணவுப் பற்றாக்குறை இல்லை….” அரசாங்கம் அறிவிப்பு!!

போதிய உணவு கையிருப்பில் இருப்பதால், உணவுப் பற்றாக்குறை தொடர்பில் பீதியடைய வேண்டாம் எனவும் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாட்டில் உணவுப் பற்றாக்குறை இல்லை என பொது மக்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டில் அரிசி மற்றும் சீனிக்கு பற்றாக்குறை நிலவுவதாக பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், நாட்டு மக்களுக்கு தேவையான அரிசி மற்றும் சீனி தற்போது கையிருப்பில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

Read more

ஊரடங்கு சட்டம் நீக்குவது தொடர்பில் தகவல்!!

நாட்டை முடக்குவதன் மூலம் மட்டும் கொரோனா தொற்றுநோயை சமாளிக்க முடியாது, மக்களின் ஒத்துழைப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது முக்கியமானது என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். இதேவேளை, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டாலும் பயணக் கட்டுப்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், “நாட்டை முடக்குவதன் மூலம் மட்டுமே Read More

Read more

ஒக்டோபர் இறுதியில் மாற்றம் வரும் – வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர நம்பிக்கை!!

புதிய வைரஸ் திரிபுகளினால் நாட்டுக்கு பிரச்சினை ஏற்படாவிட்டால் ஒக்டோபர் இறுதியில் கொரோனா மரணங்கள் குறைவடையும் சாத்தியம் உள்ளதாக வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார். கொரோனா தொற்றினால் நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய நிலைமையை விட சற்று இலகுவான நிலைமை ஏற்படுவதாக இருந்தால், எனது கணிப்பின் பிரகாரம் செப்டம்பர் இறுதியாகும்போது தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடையும். நோயாளர்கள் குறைவடைந்து இரண்டு வாரங்கள் செல்லும்போது மரணங்களும் குறைவடையும். புதிய வைரஸ் திரிபுகளினால் எமக்கு பிரச்சினை ஏற்படாவிட்டால் ஒக்டோபர் நடுப்பகுதியாகும்போது குறிப்பிடத்தக்களவில் கொரோனா Read More

Read more