#Covid19

LatestNews

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்! விசேட மருத்துவ நிபுணர் தகவல்!!

எதிர்வரும் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதங்களுக்குள் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை முற்றாக கட்டுப்படுத்த முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பிரசன்ன குணசேன இதனை கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நிலைமையை நெருங்க வேண்டுமாயின் இலங்கை மக்கள் தொகையில் 60 வீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். இதற்காக உலகில் தடுப்பூசிகளை தயாரிக்கும் நான்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை Read More

Read More
LatestNews

கொரோனாவின் உச்சத் தாண்டவம்! இந்தியாவை விட மோசமடையும் இலங்கை – 5000 தொற்றார்கள் மாயம்!!!!

கொரோனாவின் உச்ச தாண்டவம்! இந்தியாவை விட மோசமடையும் இலங்கை – 5 ஆயிரம் தொற்றார்கள் மாயம் கொரோனா தொற்று இந்தியாவை விட மோசமான கட்டத்தை இலங்கை அடைந்துள்ளது என புள்ளி விபரங்களுடன் அம்பலப்படுத்துகின்றது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம். தொற்று நோய் ஏற்படப்டு சிகிச்சை பெற்றுவந்த 5 ஆயிரம் தொற்றாளர்களின் நிலை என்ன எனவும் அரசாங்கத்திடம் கேள்வி எமுப்பியுள்ளனர்.

Read More
LatestNews

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு வெளியானது முக்கிய அறிவிப்பு !!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்று 14 நாட்களை கடந்திருந்தாலும், விமான நிலைய பிசிஆர் பரிசோதனை முடிவு வெளியாகும் வரை தனிமைப்படுத்தலில் ஈடுபடுவது அவசியம் என ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் மீண்டும் தொற்று ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும், இதனாலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுகாதார அமைச்சின், தனிமைப்படுத்தல் பிரிவின், விசேட சமுக வைத்திய நிபுணர் டில்ஹானி சமரசேகர தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் Read More

Read More
LatestNews

நாட்டில் உடன் அமுலாகும் வகையில் முடக்கப்பட்டுள்ள பகுதிகள்!!

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மிராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை ஆகிய கிராமங்கள் இன்று புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார். ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து காணப்படுவதுடன், மரணங்களும் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை அவசர கூட்டம் இடம்பெற்ற போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓட்டமாவடி Read More

Read More
LatestNews

மேலும் ஒரு மாதத்திற்கு பயணக்கட்டுப்பாடு? தவறின் விளைவுகள் மோசமாகும் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!!!

தற்போது அமுலில் உள்ள பயணத்தடையின் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள குறைந்தது மேலும் ஒரு மாதமாவது அந்த கட்டுப்பாட்டை நீடிக்கவேண்டுமென இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் சங்கம் தெரிவித்துள்ளது. பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மேலும் ஒரு மாதத்திற்கு பயணக்கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என சங்கத்தின் தலைவர் டொக்டர் பத்மா குணரத்தன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மே்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளபோதிலும் பொதுமக்களின் செயற்பாடு Read More

Read More
LatestNews

ஜூன் மாதம் முழுவதும் ஊரடங்குச் சட்டம்! கோட்டாபய தலைமையில் ஆராய்வு!!!!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளபயணத்தடை காரணமாக கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் எதிர்பார்த்த எதுவும் நடக்காத நிலையில், ஜூன் மாதம் முழுவது பூரணமான ஊரடங்குச சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் குறித்த அராய்வு மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் 11ஆம் திகதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.

Read More
LatestNews

பாடசாலைகள் திறப்பது எப்போது? சற்றுமுன் வெளிவந்த தகவல் !!

நாட்டில் தற்போது காணப்படுகின்ற அசாதாரண நிலைமையினால், பாடசாலைகளை மீள ஆரம்பிக்கின்றமை குறித்து, இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துக கொண்டே செல்கின்றது. எனினும் இம்மாதம் 29ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கிய Read More

Read More
LatestNews

இன்னமும் தீர்மானிக்கவில்லை! தேவை ஏற்பட்டால் பயணத்தடை வரும்!!!!

எதிர்வரும் 14ஆம் திகதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கடந்த ஏழாம் திகதி தளர்த்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

Read More
LatestNews

ஜூன் 14 பின்னரும் பயணத்தடையா? பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!!

பொதுமக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக நாட்டில கொரோனா மேலும் பரவலடைய வாய்ப்புக்கள் உள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அவ்வாறு பரவலடைந்தால் பயணத்தடை மேலும் நீடிக்க வேண்டிய தேவை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More
LatestNews

கல்விச் செயற்பாடுகள் ஆரம்பம்? கல்வியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பு!!

நாட்டில் அதிகரித்துள்ள கொரோனான தொற்று காரணமாக பாடசாலைச் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் 4 கட்டங்களாக பாடசாலைகளில் கல்விச் செயற்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் தகவல் பொய்யானது என கல்வியமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். தற்போது அதிகரித்துள்ள கொரோனா பரவல் நிலைமைக்கு மத்தியில், பாடசாலைகளை மீள திறப்பது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More