#Covid19

LatestNewsWorld

சீனாவின் தடுப்பூசியை தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்த்த சிங்கப்பூர்!!

சீனாவின் சினோவாக் தடுப்பூசியை சிங்கப்பூரில் செலுத்திக் கொள்வோரை தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் கணக்கிடவில்லை என்று அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மொடர்னா மற்றும் பைஸர் தடுப்பூசியை செலுத்திக் கொள்வோர் மட்டுமே சிங்கப்பூரின் கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்தியவர்களாக அந்நாட்டு அரசு கணக்கிட்டுள்ளது. சினோவாக் தடுப்பூசி குறித்து முழுமையான அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறாததால் அந்தத் தடுப்பூசியை தேசிய திட்டத்தில் சேர்க்கவில்லை என சிக்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் இதுவரை 37 லட்சம் மக்கள் பைஸர் அல்லது Read More

Read More
LatestNews

இன்று (06) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்!!

முப்படையினரால் முன்னெடுக்கப்படுகின்ற தடுப்பூசி மத்திய நிலையங்கள் உள்ளட்டங்கலாக நாடளாவிய ரீதியில், 74 மத்திய நிலையங்களில் இன்று (06) தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகின்ற மத்திய நிலையங்களின் பட்டியல்…    

Read More
LatestNews

முதற்கட்ட Pfizer தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!!

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Pfizer தடுப்பூசியின் முதல் தொகுதி இன்று  (05) அதிகாலை நாட்டை வந்தடைந்தது. இந்த தொகுதியில் 26,000 தடுப்பூசிகள் அடங்குவதுடன், இம் மாதத்திற்குள் 02 இலட்சம் Pfizer தடுப்பூசிகள் கட்டம் கட்டமாக கிடைக்கவுள்ளன. முதலாவதாக AstraZeneca தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசியாக இதனை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், AstraZeneca முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட 6 இலட்சம் பேரினால் இன்னும் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. ஜப்பானிலிருந்து AstraZeneca Read More

Read More
LatestNews

யாழ்ப்பாணம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பல பகுதிகள் முடக்கம்!!

இன்று (06) காலை 6 மணி முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மூன்று மாவட்டங்களில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாத்தறை, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நான்கு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார். மாத்தறை உயன வத்த உயன வத்த வடக்கு யாழ்ப்பாணம் நாரந்தனை வடமேற்கு களுத்துறை புஹாபுடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மலபடவத்த

Read More
LatestNews

செப்டம்பர் வரை கட்டுப்பாடுகள் – ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு!!!!

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்வு ஒன்றில் பேசியபோதே தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் செப்டம்பர் வரை நீடிக்கும் எனக் கூறினார். இந்த மாதம் மேலும் 9 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. தடுப்பூசிகளை விரைவில் வழங்கி செப்டம்பர் மாதமளவில் நாட்டைத் திறக்க உத்தேசித்திருக்கின்றோம். தொடர்ந்தும் நாட்டை முடக்கிவைத்திருந்தால் மிகப்பெரிய பொருளாதார சவால்கள் ஏற்படலாம் என்றும் ஜனாதிபதி இதன்போது Read More

Read More
LatestNews

இணையக் கல்வி சம அளவில் கிடைக்கவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு!!

அனைத்து மாணவர்களுக்கும் இணையக் கல்வி சம அளவில் கிடைக்காமையால், பாடசாலை மாணவர்களின் உரிமை மீறப்படுவதாக தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்துள்ளது. மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட கிளை அலுவலகத்தில் இன்று இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, கிழக்கு மாகாண கல்வி செயலாளர் கிறிஸ்டி பெர்ணாந்து, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் M.T.A. நிசாம் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் Read More

Read More
LatestNews

திங்கட் கிழமை முதல் நாடளாவிய ரீதியில் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள்!!

நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை (05) முதல் புதிய சுகாதார வழிகாட்டல்கள் உள்ளடங்கிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிடப்போவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் சூழ்நிலையை மீளாய்வு செய்துள்ள நிலையில் இந்த புதிய வழி முறைகளை உள்ளடக்கிய சுற்றறிக்கை எதிர்வரும் 5ஆம் திகதி  வெளியிடப்படவுள்ளதாக மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவர் தம்மிகா ஜயலத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் விசேட Read More

Read More
LatestNews

உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்ட பகுதிகள்!!!

4 மாவட்டங்களைச் சேர்ந்த 5 பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலேயே தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டம் மாட்டுவாகல தோட்டத்தின் மேற்பிரிவு கம்பஹா மாவட்டம் ஹெந்தளை வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஓலந்த கிராமம் கொழும்பு மாவட்டம் ஒபேசேகரபுர (514சீ) கிராம சேவகர் பிரிவு நுவரெலியா மாவட்டம் கொட்டியாகல தோட்டத்தின் கீழ் பிரிவு ஆகிய பிரதேசங்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Read More
LatestNews

12,000 கிலோ கத்தரிக்காயை தீ வைத்து எரித்த விவசாயி! காரணம் என்ன??

தம்புல்லையில் விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் விளைந்த சுமார் 12,000 கிலோ கத்தரிக்காய்யை தீவைத்து எரித்துள்ளார். பூச்சிக்கொல்லி மருந்து இல்லாததால் விவசாய அதிகாரிகளின் முன் இவர் தனது தோட்டத்து கத்தரிக்காய்க்கு தீ வைத்துள்ளார். ஐந்து ஏக்கர் காணியில் விதைக்கப்பட்ட கத்தரிக்காயில் 14, 000 கிலோ அறுவடை செய்யப்பட்டுள்ளது. எனினும் பூச்சிக்கொல்லி மருந்து கிடைக்காததால் இவற்றில் 12, 000 கிலோ விற்கமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. 2, 000 கிலோ மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது என குறித்த விவசாயி Read More

Read More
LatestNewsTOP STORIES

திடீரென முடக்கப்படட இடங்கள் – மீண்டும் படிப்படியாக முடக்கப்படுமா நாடு??

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10 மணி முதல் அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பகுதி முடக்கப்படவுள்ளது. கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம் ரக்கீப் தலைமையில் நடைபெற்ற உயர் மட்டக்கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று இரவு முதல் மருதமுனை பிரதேசத்திற்கு வெளியில் இருந்து பொதுமக்கள் உட்பிரவேசிப்பதும், மருதமுனையில் இருந்து வெளியேறுவதும் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி நுவரெலியா Read More

Read More