#Covid19

LatestNews

பகடையாக்கப்படும் 43 இலட்சம் மாணவர்களின் எதிர்காலம் – ஆசிரியர்களின் படுமோசமான செயற்பாடு!!

இலங்கையில் அனைத்து ஆசிரியர்களும் இணையவழிக் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளமை படுமோசமான செயற்பாடாகவே கருத வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதால் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்விடயத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளும் கிடையாது. கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதற்கு 43 இலட்சம் மாணவர்களை பகடையாக வைப்பது எந்தளவுக்கு நியாயமாகும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று Read More

Read More
LatestNewsWorld

2 L அமெரிக்க டொலர் மற்றும் 2 L அன்டிஜன் பரிசோதனை உபகரணங்கள் பெறப்போகும் இலங்கை!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் 2 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி மற்றும் 2 இலட்சம் அன்டிஜன் பரிசோதனை உபகரணங்களைப் பெறுவதற்குத் தகுதிபெற்றிருக்கும் 5 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. இதுகுறித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துப்பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியநிபுணர் சந்திம ஜீவந்தர கூறியிருப்பதாவது, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்றை இனங்காண்பதற்கான அன்டிஜன் பரிசோதனையை முன்னெடுப்பதற்கு அவசியமான உபகரணங்கள் Read More

Read More
indiaLatestNews

இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகளில் “எய்ட்ஸ்” கூறுகளா? விசேட வைத்திய நிபுணர் வெளியிட்டுள்ள தகவல்!!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியில் எய்ட்ஸ் கூறுகள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன தெரிவித்துள்ளார். இது தடுப்பூசியுடன் தொடர்பான விடயம் அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இதுதொடர்பான விடயம் பத்திரிக்கை ஒன்றில் தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது. இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நாம் கவனம் செலுத்தும் போது சில விடயங்களை புரிந்து கொள்ள முடியும். Read More

Read More
LatestNews

பொது மக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை!!

பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பொது இடங்கள், கடைகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவற்றில் முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்ய சிவில் உடையிலும் சீருடையிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகளவில் செறிந்திருக்கும் இடங்களில் கட்டாயமாக முகக் கவசம் Read More

Read More
LatestNews

யாழில் இன்று முதல் முடக்கப்படும் பிரதேசம்- இராணுவத் தளபதி தெரிவிப்பு!!!

நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில்  தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில்ல, 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவர் பிரிவுகள் உடன் நடைமுறையாகும் வகையில் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களின் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவின், வடமராச்சி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்துவில் Read More

Read More
indiaLatestNewsWorld

வெளிநாடுகளில் உள்ள 124 இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகி உள்ள செய்தி!!

16 நாடுகளில் தொழில்புரிந்த 124 புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கள ரன்தெனிய இந்த தகவலை தெரிவித்தார். எனினும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். உயிரிழந்தவர்களுக்காக அவர்களின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்படும் மரண சடங்குகளுக்காக தலா 40,000 ரூபா கொடுப்பனவும், இந்த குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா நட்டஈடும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதேவேளை, வௌிநாடுகளில் தொழில்புரியும் 4,500-க்கு மேற்பட்ட இலங்கையர்கள் Read More

Read More
LatestNews

லம்ப்டா வைரஸ் திரிபு இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

லம்ப்டா கொரோனா வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். லம்ப்டா வைரஸ் திரிபு தொடர்பில் சுகாதார அமைச்சு மிகுந்த அவதானத்துடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த வைரஸ் திரிபிற்கான மாதிரிகளை தொடர்ந்தும் பரிசோதித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். லம்ப்டா கொரோனா Read More

Read More
LatestNews

கொரோனா கட்டுபாடுகள் நீக்கம் தொடர்பில் இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு!!

நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த கொரோனா சுகாதார கட்டுப்பாடுகள் சில நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலைமை காரணமாக விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று இன்று வெளியிடப்பட உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஏற்கனவே, 5 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் கடந்த 4ஆம் திகதி சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNews

07 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கம்!!

இரண்டு மாவட்டங்களின் 7 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (08) காலை 06 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவின் கீழுள்ள 05 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மாத்தளை மாவட்டத்தின் மஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 02 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.

Read More
LatestNews

இரண்டாவது தடுப்பூசியாக Pfizer ஏற்றும் நடவடிக்கை இடைநிறுத்தம்!!

முதலாவதாக AstraZeneca தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு இரண்டாவதாக Pfizer தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். நாட்டிற்கு தேவையான AstraZeneca தடுப்பூசிகளை இம்மாத இறுதிக்குள் வழங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளதாக அவர் கூறினார். குறித்த தொகை தடுப்பூசி கிடைக்கப்பெற்றதும் முதலாவதாக AstraZeneca தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் Read More

Read More