இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகளில் “எய்ட்ஸ்” கூறுகளா? விசேட வைத்திய நிபுணர் வெளியிட்டுள்ள தகவல்!!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியில் எய்ட்ஸ் கூறுகள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

இது தடுப்பூசியுடன் தொடர்பான விடயம் அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இதுதொடர்பான விடயம் பத்திரிக்கை ஒன்றில் தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது. இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நாம் கவனம் செலுத்தும் போது சில விடயங்களை புரிந்து கொள்ள முடியும்.

குறிப்பிட்ட இந்திய நிறுவனம் ஒன்றினால் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் இவ்வாறான எய்ட்ஸ் கூறு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

இதனால் இந்தியாவில் இருந்து பெறப்படவிருந்த தடுப்பூசி பெறுகையை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் இடை நிறுத்தியது. அமைச்சரவை விசேட பெறுகை குழுவிடம் இந்த விடயம் முன்வைக்கப்பட்டது. இந்த குழு விரிவாக ஆராய்ந்த பின்னரே நாம் நடடிக்கை மேற்கொண்டோம்.

இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் இவ்வாறான எய்ட்ஸ் கூறு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட விடயம் தொடர்பிலேயே இந்த தலைப்பு செய்தி எழுதப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

பொறுப்பற்ற விதத்தில் பொறுப்பான பத்திரிகை நிறுவனம் இவ்வாறு செய்தி வெளியிடுவதையிட்டு நாம் கவலையடைகின்றோம்.

தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் பொது மக்களுக்குள்ள ஆர்வம் மற்றும் நம்பகத்தன்மையை இவ்வாறு சீர்குலைக்கப்படுவதையிட்டு வருந்துகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *