கோட்டாபய தலைமையில் ஆரம்பமான விசேட கலந்துரையாடல் -விசேட அறிவிப்பு வெளிவரும்??
அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றை அடுத்து நாட்டை முடக்குமாறு சுகாதார தரப்பு அரசுத் தலைமையிடம் வலியுறுத்தலை விடுத்து வருகின்றது. எனினும் அரசாங்கம் பொது முடக்கத்திற்கு சாத்தியம் இல்லை எனத் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சுகாதார நிபுணர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டுள்ள விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்று வரும் இந்த சந்திப்பில் நாட்டின் நிலைமை பற்றி முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக Read More
Read More