#Corona

LatestNews

உடனடியாக ஊரடங்கு விதியுங்கள் – அரசாங்கத்திற்கு அவசர அறிவிப்பு!!

இலங்கையில் கொரோனாவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆகவே நாட்டில் மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்கான ஒரே வெற்றிகரமான வழிமுறையாக அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை விதிக்க வேண்டும் என விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் (AMS) அழைப்பு விடுத்துள்ளது. நாடு முழுவதும் டெல்டா மாறுபாடு அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதார பிரிவுகளிலும், சுகாதாரத் துறை அதன் அதிகபட்ச செயற்திறனை எட்டியுள்ளது என சங்கத்தின் தலைவர் டாக்டர் லக்குமார் பெர்னாண்டோ கூறினார். கொரோனா நோயாளிகளுக்கு இடமளிக்கும் Read More

Read More
LatestNews

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

கொழும்பில் வசிப்போருக்கு டிஜிட்டல் தடுப்பூசி அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது. கொழும்பு 1 முதல் 15 வரையிலானவர்களுக்கு இவ்வாறு டிஜிட்டல் தடுப்பூசி அட்டைகள் வழங்கப்படும் என மாநகரசபையின் தொற்று நோய் நிபுணர் டொக்டர் தினு குருகே தெரிவித்துள்ளார். கொவிட் டிஜிட்டல் தடுப்பூசி அட்டையை பெற்றுக் கொள்ள விரும்புவோர் தடுப்பூசி இரண்டு பக்கங்களையும், தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் இரண்டு பக்கங்களையும் , தொடர்பு இலக்கத்தையும்  epidunitcmc@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிற்கு அனுப்பி Read More

Read More
LatestNews

வெளிவந்த அதிர்ச்சி தகவல் – இலங்கையில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா!!

இலங்கையில் இதுவரை 45831 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்கு இன்று வியாழக்கிழமை பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். அதன்படி, இதுவரை 10 வயதுக்கும் கீழ்ப்பட்ட 19688 சிறுவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதோடு, 10 தொடக்கம் 18 வரையான சிறுவர்களில் 26143 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். 18 வயதுக்கும் கீழ்ப்பட்ட 14 சிறுவர்கள் இதுவரை கொவிட் Read More

Read More
LatestNews

இலங்கை மக்களை அச்சுறுத்தும் மற்றுமொரு நோய் -மருத்துவர்களை நாடுமாறு அறிவுறுத்தல்!!

கொரோனா தொற்றை அடுத்து இலங்கை மக்களை மற்றுமொரு நோய் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. டீனியா என்கிற ஒருவித பூஞ்சை நோயே இலங்கை மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது கொரோனா தொற்றுடன் நேரடியாக தொடர்புபடாத போதிலும் அறிகுறிகள் ஏற்படும் பட்சத்தில் மருத்துவர்களை நாடும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள், மிருகங்கள் என பலருக்கும் இந்த தோல் நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது. விரல், தலை என பல்வேறு இடங்களிலும் தொடர் அரிப்பு நிலைமையை ஏற்படுத்தும் என்றும் Read More

Read More
LatestNews

சீன தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிரபல சிங்கள நடிகைக்கு தொற்றியது கொரோனா!!

பிரபல சிங்கள நடிகை ஷலனி தாரகாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனது பேக்புக் பக்கத்தில் இதை அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. தன்னுடன் நடித்த பலருக்கு தொற்று இருப்பதையடுத்து, ஜூலை 31ஆம் திகதி முதல் தாம் சுயதனிமைப்படுத்தலில் இருப்பதாகவும், தமக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாகவும் குறிப்பிட்டார். மேலும், தான் சீனாவின் சினோபார்ம் இரண்டு தடுப்பூசிகளை பெற்றிருந்தாலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் Read More

Read More
LatestNewsWorld

சீனாவின் வுகான் நகரில் மீண்டும் கொரோனா -அதிர்ச்சியில் சுகாதார அதிகாரிகள்!!

ஒரு வருட காலத்துக்கு பின்னர் சீனாவின் வுகான் நகரில் மீண்டும் கொரோனா தொற்று பரவுவதால் அதிர்ச்சி அடைந்துள்ள சுகாதார அதிகாரிகள், அங்குள்ள மக்கள் அனைவருக்கும் சோதனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். கொரோனாவின் ஊற்றுக்கண் என வர்ணிக்கப்படும் வுகானில் ஒரு கோடியே 10 இலட்சம் பேர் வசிக்கின்றனர். அங்கு நேற்று திங்கள்கிழமை புலம் பெயர் தொழிலாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வுகானின் அனைத்து மக்களுக்கும் கொரோனா இருக்கிறதா என்பதை அறிய முழுமையான Read More

Read More
LatestNews

அஸ்ட்ராசெனெகா போதுமான அளவு உள்ளது – வைத்தியர் விளக்கம்!!

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற அனைவருக்கும் இரண்டாவது டோஸை வழங்க போதுமான அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். தடுப்பூசியை நிர்வகிப்பதற்காக நிறுவப்பட்ட தடுப்பூசி மையங்கள் பற்றிய தகவல்களுக்கு, சம்பந்தப்பட்ட சுகாதார மருத்துவ அலுவலர் (MOH) துறைகளை தொடர்பு கொள்ளுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். இந்தியாவில் ஏற்பட்ட உள்ளூர் தேவையின் நிமிர்த்தம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. ஆகையால் இலங்கையில் அத்தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு Read More

Read More
LatestNews

திறக்கப்படவுள்ள பாடசாலைகள்?? – கல்விஅமைச்சர் வெளியிட்ட தகவல்!!

ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை வெளிக்கள ஊழியர்களில் 83 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தடுப்பூசி இம்மாத இறுதி வாரத்தில் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் பாடசாலைகளை விரைவாக திறந்து கல்வி நடவடிக்களைத் தொடங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிடடார்.

Read More
LatestNewsTOP STORIES

யாழில் திருவிழாவில் பங்கேற்ற 49 பேருக்கு கொரோனா!!

யாழ். கரவெட்டி தெற்கில் அமைந்துள்ள முருகன் ஆலயம் ஒன்றில் அண்மையில் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எழுமாறாக 179 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 49 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஆலயத் திருவிழாவில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என அறியப்பட்ட நிலையில், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் பொதுச் சுகாதார பரிசோதகரினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையிலேயே தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றாளர்கள் அதிகம் அடையாளம் Read More

Read More
LatestNews

இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட பொலிஸார் பலருக்கு கொரோனா!!

இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் முழுமையாக போடப்பட்ட சுமார் 300 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தடுப்பூசி பெற்றுக்கொண்டு சில வாரங்களுக்குப்பின் இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களம் இந்த நிலைமை குறித்து கவலை எழுப்பியதுடன், சுகாதார நிபுணர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடுமையான அறிகுறிகளால் பாதிக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். தடுப்பூசிகளால் வைரஸின் கடுமையான பாதிப்பையும், இறப்புகளையும் தடுக்க முடியும் என்றாலும், மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்படுவதை Read More

Read More