பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு வெளியிடட முக்கிய தகவல்!!

2021இற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், குறித்த கால கட்டத்தில் பாடசாலைகளில் ஆரம்ப தரத்திற்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது என்றும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆரம்ப தரத்திற்கான கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது பரீட்சை சூழலை பேண முடியாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிபர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்க வேண்டும். அத்தகைய, பாடசாலைகளின் Read More

Read more

ஜனவரி 03 முதல் மூடப்படுகிறது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!!

நாட்டில் சுத்திகரிப்புக்கான கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் ஜனவரி 3ஆம் திகதி முதல் மூடப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரலாற்றில் முதல் தடவையாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரை மூடப்பட்டது. இது குறித்து எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் எம்.எஸ்.ஓல்காவிடம் சிங்கள ஊடகமொன்று கேட்டபோது ​​ஜனவரி 25ம் திகதிக்கு பிறகு ஒரு சரக்கு கச்சா எண்ணெய் Read More

Read more

மூடப்பட்டது பாசலை….. 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்று மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலையே பாடசாலை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட தமிழ் வித்தியாலயத்திற்கு காலையில் பாடசாலைக்கு சென்ற 17 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை 07.40 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலைக் கட்டடம் ஒன்றுக்கு அருகாமையில் உள்ள பாரிய மரம் ஒன்றில் இருந்த குளவி கூட்டினை Read More

Read more

லிற்றோ நிறுவனம் வழமைபோன்று விநியோகம் தொடரும் என அறிவிப்பு!!

லிற்றோ எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கும் செயற்பாடு வழமை போன்று தொடரும் என நிறுவனத்தின் பேச்சாளர் சிங்கள ஊடகெமொன்றுக்கு தெரிவித்தார். பராமரிப்பு பணிகளுக்காக தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தாலும், சிலிண்டரிலிருந்து வாயு வெளியேற்றம் சாதாரணமாகவே இருந்ததாக அவர் குறிப்பிட்டார். எனினும், விநியோகத்தை இடைநிறுத்துமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண(Lasantha Alagiyawanna,) லிட்ரோ மற்றும் லாப்ஸ் காஸ் ஆகிய இரண்டிற்கும் கடிதம் எழுதியுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வாயுக்களால் வெளிப்படும் துர்நாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் ‘மெர்காப்டன்’ என்ற Read More

Read more

யாழில் மூடப்பட்டது யாழின் பிரபல வங்கியின் பிரதான கிளை!!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் அமைந்துள்ள கொமர்ஷல் வங்கியின் பிரதான கிளையில் பணியாற்றும் 12 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அந்தக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது. அத்துடன், அந்தக் கிளையில் பணியாற்றும் 40 உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்பு தொழிலாளிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொமர்ஷல் வங்கியின் யாழ்ப்பாணம் பிரதான கிளையில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகள் என 34 பேரிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவர்களில் சுத்திகரிப்பு தொழிலாளி ஒருவர் உள்பட 12 பேருக்குகொவிட்-19 Read More

Read more

யாழ். பருத்தித்துறையில் இரு மதுபான சாலைகளுக்கு சீல்!!

யாழ். பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பருத்தித்துறை கிராம கோட்டுச் சந்தியிலுள்ள மதுபான விற்பனை நிலையம் மற்றும் ஆனைவிழுந்தான் மதுபான விற்பனை நிலையம் என்பன இன்று பொதுச் சுகாதார பரிசோதகரினால் 14 நாட்களுக்கு மூடப்பட்டது. கடந்த வாரம் ஆனைவிழுந்தான் மதுபான விற்பனை நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு பணியாற்றியோருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மதுபான விற்பனை நிலையத்தின் மேலுமொரு பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் Read More

Read more

கொரோனா அபாயம்- மூடப்பட்டது மாநகர சபை!!

நீர்கொழும்பு மாநகர சபையின் ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் 20 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இன்று வியாழக்கிழமை முதல் நான்கு தினங்களுக்கு நீர்கொழும்பு மாநகர சபை மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநகர சபைக்கு வந்து பொதுமக்கள் சேவையை பெற்றுக் கொள்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பொதுசுகாதார பிரிவில் கொரோனா தொற்றாளர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Read more