#Child Death

FEATUREDLatestNewsTOP STORIES

கணேசபுரம் காட்டுப் பகுதியிலில் 16 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்பு!!

வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சிறுமி தாய் தந்தையினை இழந்த நிலையில் மாமாவின் அரவணைப்பில் வசித்து வந்த நிலையில் நேற்று மதியம் தனியார் கல்வி நிலையம் சென்றதன் பின்னர் மாலை 5.30 வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, குறித்த சிறுமியினை தேடிய உறவினர்கள் அவரைக் கண்டு பிடிக்க முடியாமையால் நெளுக்குளம் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர் முறைப்பாட்டிற்கு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சிறுமி “பாத்திமா ஆயிஷா”வின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது….. குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி!!

சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை – அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். குறித்த நபர் உயிரிழந்த சிறுமியின் உறவினருமாவார்.   இதேவேளை, சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.   9 வயது சிறுமி ‘ஆயிஷா’ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் கைது….. Read More

Read More
LatestNewsTOP STORIES

3 வயது சிறுமியின் உயிரை பறித்தது தண்ணீர் பீப்பா!!

மட்டக்களப்பு-களுவாஞ்சிகுடியில் பிளாஸ்டிக் பீப்பாய் ஒன்றினுள் 3வயது சிறுமி தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று பிற்பகல் குறித்த சிறுமி வீட்டிலிருந்த வேளை தண்ணீர் குழாய் இருக்கும் இடத்திற்குச் சென்றுள்ளார். அதன் போது அங்கு இருந்த சிறிய பிளாஸ்டிக் பீப்பாயில் கையிலிருந்த ஜம்பு பழத்தை போட்டுள்ளார். பின்னர் அந்த பழத்தை மீண்டும் எடுப்பதற்கு முயற்சித்த வேளை சிறுமி தலைகீழாக பீப்பாய்க்குள் தவறி வீழ்ந்துள்ளார். 23 அங்குலம் உயரம் கொண்ட அந்த சிறியரக Read More

Read More
LatestNews

14 வயது மாணவி அடித்து கொலை….. தந்தையும் தந்தையின் சகோதரனும் கைது!!

கம்பளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இசம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும், சிறியதந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், காதல் விவகாரம் காரணமாக சிறுமியின் சிறியதந்தை நேற்றைய தினம் அவரை தாக்கியுள்ளார். அதன்பின்னர் நேற்று அதிகாலை சிறுமி உடல்நிலை சரியில்லாமல் புலம்பிய போது, ​​சிறுமியின் தந்தை மீண்டும் தாக்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. பின்னர் சிறுமியை Read More

Read More
News

ஏணைக் கயிறு இறுகி நான்கு வயது பெண் குழந்தை பலி!!

வவுனியா அண்ணாநகர் பகுதியில் ஏணைக் கயிறு கழுத்தில் இறுகி நான்கு வயது பெண் குழந்தை பலியாகியுள்ளது. குறித்த குழந்தை ஏணையில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக அதன் கயிறு கழுத்தில் இறுகியதில் குழந்தை பலியாகியுள்ளது. எனினும், குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளது. சம்பவத்தில் பரமேஸ்வரன் அருட்சிகா என்ற நான்கு வயது குழந்தையே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More
LatestNews

வாழைப்பழத்தால் 11 மாத குழந்தையின் உயிர் பறிபோனது!!

நேற்று (12) மாலை வாழைப்பழத்தை உட்கொண்ட 11 மாத ஆண் குழந்தை தொண்டையில் சிக்கியதால் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர். அஹங்கம, அட்டுங்கலே தோட்டத்தில் வசிக்கும் குழந்தையே உயிரிழந்தது. அஹங்கம கிராமிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Read More
LatestNews

வீட்டில் பரவியது தீ….. உடல் கருகி இறந்த 8 வயது சிறுமி!!

மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தெரிய வருகையில், வீட்டிலுள்ள அறையொன்றில் பரவிய தீயினால், வீட்டின் கூரை உடைந்து வீழ்ந்துள்ளது. இதன்போது வீட்டிலிருந்த 8 வயதுச் சிறுமி தீக்கிரையாகியுள்ளார். தீ பரவும் சந்தர்ப்பத்தில் வீட்டிலிருந்த குறித்த சிறுமியின் பாட்டி மற்றும் சகோதரி ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீட்டில் பரவிய தீயை வெலிகம காவல்துறையினர் மற்றும் மாத்தறை Read More

Read More