அரசாங்க ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி!!
அரசு ஊழியர்களின் மே மாதத்துக்குரிய சம்பளத்தை உரிய திகதிக்கு முன்னர் செலுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கொவிட் -19 தொற்றுநோயை கருத்திற்கொண்டு பயண கட்டப்பாடு விதிக்கப்பட்டமை, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் அரசு ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் வழங்கப்பட்டதே இதற்குக் காரணம்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் நிதியமைச்சின் செயலாளரால் இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மே மாதத்திற்கான அனைத்து அரசு ஊழியர்களின் சம்பளமும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என்று நிதியமைச்சின் செயலாளர் ஆட்டிகலே தெரிவித்துள்ளார்.