வலிமை படத்தின் டிக்கெட்டுக்காக கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த ரசிகர்கள்!!
பல எதிர்பார்ப்புகளை கடந்து திரையில் வெளிவரவிருக்கும் அஜித் நடித்த வலிமை படத்தின் டிக்கெட்டுக்காக எதையும் பொருட்படுத்தாமல் காத்திருக்கும் ரசிகர்கள்.
நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’.
இதில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
அஜித்-எச்.வினோத்-போனி கபூர் கூட்டணியில் ‘நேர்கொண்ட பார்வை’ படம் வெளியாகி வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதன் பிறகு இவர்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
‘வலிமை’ படத்தின் பணிகள் முடிந்து பொங்கலுக்கு திரையரங்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
கொரோனா 3ஆம் அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பிறகு ‘வலிமை’ திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி (வியாழன்கிழமை) திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
பல நாட்களுக்கு பிறகு திரையரங்கில் இப்படம் வெளியாக இருந்தாலும் ரசிகர்கள் எந்த ஒரு சோர்வும் இல்லாமல் படம் பார்ப்பதற்காக ஆர்வத்தோடு நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர்.
வலிமை திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு இப்படம் இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.