நுரைச்சோலை அனல்மின் நிலைய செயற்பாடுகள்….. ஜூன் 13 முதல் 100 நாட்களுக்கு இடைநிறுத்தம்!!
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 ஆவது அலகின் செயற்பாடு இடைநிறுத்தப்படவுள்ளதாக
மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்
திட்டமிடப்பட்ட பாரிய பராமரிப்பு பணிகளுக்காக,
எதிர்வரும் ஜூன் 13 ஆம் திகதி முதல் 100 நாட்களுக்கு குறித்த அலகு இவ்வாறு இடைநிறுத்தப்படவுள்ளது.
எவ்வாறாயினும் ஏனைய மின் நிலையங்களைப் பயன்படுத்தி மின்வெட்டு இன்றி மின் உற்பத்தி முகாமை செய்யப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.