ரசிகர்களுக்கு நேரில் இன்ப அதிர்ச்சி கொடுக்கவுள்ள சிம்பு!!
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களை மகிழ்ச்சியில் குளிக்க வைக்க சிம்பு அதிரடி நடவடிக்கை எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மாநாடு’.
இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார்.
இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் பல தடைகளை கடந்து நவம்பர் மாதம் 25-ந்தேதி தியேட்டரில் வெளியானது. அடுத்த சில நாட்களில் மாநாடு படத்தின் வெற்றியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் சிம்பு கேக் வெட்டி கொண்டாடினார்.
மேலும் சில தினங்களுக்கு முன்பு மாநாடு படத்தின் 25 வது நாளை படக்குழுவினர் கொண்டாடினார்கள்.
இந்நிலையில்,
மாநாடு படம் ஹிட் ஆனதையொட்டி நடிகர் சிம்பு தன் ரசிகர்களுடன் ஒரு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்விழா ஜனவரி 6-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை சிம்பு மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இச்செய்தி சிம்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.