பரிசுப் பொருட்களை தயாரிக்க, அலங்காரம் செய்ய நாணயத்தாள்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் காணொளி அறியக்கிடைத்தால்….. 2 கோடி 50 லட்சம் ரூபாய் அபராதம்!!
நாட்டில் நாணயத்தாள்களை வேண்டுமென்றே உருவச்சிதைத்தல் அல்லது சேதப்படுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆபரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்களை தயாரிப்பதற்கு நாணயத்தாள்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள விளம்பரங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி(CBSL) தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,
நாணயத் தாள்களை சேதப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை,
குற்றவாளிகள் என கண்டறியப்பட்டவர்களுக்கு 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
எனவே,
இலங்கை மத்திய வங்கிச் சட்டத்திற்கு புறம்பான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு மத்திய வங்கி பொதுமக்களை வலியுறுத்துகின்றது.