உலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் அமெரிக்க – இந்தியா கடற்படை கூட்டு பயிற்சி!!
இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் மற்றும் இந்திய விமானப்படை போர் விமானங்கள் அமெரிக்க அணுசக்தியால் இயங்கும் விமானங்களுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுப்பட்டுள்ளன.
இந்த பயிற்சி நடவடிக்கையில் இந்திய கடற்படைக் கப்பல்களான கொச்சி மற்றும் டெக், பி 8 – ஐ மற்றும் மிக் 29 – கே விமானங்கள் ஈடுப்படுத்தப்பட்டன.
விமானங்களை தாங்கிய இந்திய போர்கப்பல்கள் கூட்டு பயிற்சிகளில் ஈடுப்பட்ட நிலையில் அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல் ரொனால்ட் ரீகன், ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்பை கொண்ட கப்பல், யு.எஸ்.எஸ் ஹால்சி மற்றும் டைகோண்டெரோகா ஆகிய கப்பல்களும் பயிற்சிகளில் ஈடுப்பட்டன.
மேலும், இரு நாட்டு படைகளின் ஒத்துழைப்புகளை மேம்படுத்தல் நவீன தாக்கதுல் வசதிகளை கொண்ட கடல் மற்றும் வான் பரப்பு பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.