FEATUREDLatestNewsTechnology

செயலிழந்த மைக்ரோசொப்ட் சேவைகள்….. பயனர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

உலகின் மிக பிரபலமான மென்பொருள் நிறுவனமான மைக்ரோசொப்ட் இன் சேவைகள் தற்போது முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Outlook, MS Teams, Azure மற்றும் Microsoft 365 போன்ற மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற சேவைகளே முடங்கியுள்ளது.

குறித்த சேவைகளின் செயலிழப்பு தொடர்பாக பல பயனாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த சேவை முடக்கம் காரணமாக மைக்ரோசொப்ட் அவுட்லுக்(Outlook) மூலம் மின்னஞ்சலை பரிமாற்றுபவர்கள் பாரிய சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இணையத்தில் ஏற்பட்டுள்ள குறித்த விடயத்தை தாங்கள் கண்டுபிடித்து விட்டதாகவும், அதனை சரி செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *