அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார் வில்லன் நடிகர்!!
தமிழில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமான நடிகர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
பாலிவுட் சினிமாவில் மிக முக்கியமான இயக்குர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார்.
தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வரும் காலகட்டத்தில் பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் அனுராக் காஷ்யப்புக்கு கொரோனாவால் எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் நெஞ்சு வலி காரணமாக அவதிப்பட்ட அனுராக் காஷ்யப் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டபோது, இதயத்திற்கு செல்லும் குழாய்களில் சில அடைப்புகள் இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செயப்பட்டு அந்த அடைப்புகள் நீக்கப்பட்டன.