குளிர்காலத்தில் ரஷ்யாவின் அதிரடி நகர்வு….. எரிவாயு விநியோகம் பரவலாக குறைப்பு – 9 வீத உயர்வைக்கண்டன ஐரோப்பிய வில்லைகள்!!
ஜேர்மனி மற்றும் ஏனைய மத்திய ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை இந்த வார ஆரம்பத்தில் ரஷ்யா மேலும் குறைத்த பின்னர் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன.
உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா ஆரம்பித்த பின்னர் ஐரோப்பிய எரிவாயு விலைகள் 9 வீதத்தால் உயர்வடைந்து உயர்ந்த மட்டத்தை பதிவு செய்துள்ளது.
இதேவேளை,
ஐரோப்பிய நாடுகள் குளிர்காலத்தை எதிர்கொள்ளவுள்ளதால் ரஷ்யாவின் எரிவாயுக் குறைப்பானது பதற்றமான நிலைமையை ஏற்படுத்தியு்ளளது.
ரஷ்ய அரசாங்கம் எரிவாயுவை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாக உக்ரைன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ரஷ்யாவில் இருந்து நோர்ட் ஸ்றீம் வன் ஊடாக ஜேர்மனிக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு
அதன் இயல்பான திறனில் ஐந்தில் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனி, தனது மொத்த எரிவாயுவில் 55 வீதத்தை ரஷ்யாவில் இருந்தே இறக்குமதி செய்வதுடன்,
அதில் பெரும்பாலானவை நோர்ட் ஸ்றீம் வன் குழாய் ஊடாக விநியோகிக்கப்படுகின்றது.
ஏனையவை,
நிலத்தின் கீழ் ஊடாக செல்லும் குழாய் ஊடாக பெறப்படுகின்றது.
ரஷ்யாவில் இருந்து 5 வீதத்திற்கு குறைவான எரிவாயுவை இறக்குமதி செய்வதால்,
பிரித்தானியா எரிவாயு விநியோகத் தடையால் நேரடியாகப் பாதிக்கப்படாது.