500mt எடை கொண்ட சர்வதேச விண்வெளி மையம் இந்தியா, சீனா மீது விழும் அபாயம்….. ரஷ்யா விண்வெளித்துறை தலைவர் டிமிட்ரி ரோகொசின்!!

500 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி மையத்தின் பாகங்கள் இந்தியா, சீனா மீது விழும் என்று ரஷ்யா விண்வெளித்துறை தலைவர் டிமிட்ரி ரோகொசின் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா நாட்டு படைகள் 3வது நாளாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதையடுத்து,

ரஷ்யா மீது அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பியா நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளனர்.

 

இந்த பொருளாதார தடைகளால் அந்நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

மேலும்,

ரஷ்யாவின் விண்வெளித்துறைச் சார்ந்த நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

இதனிடையே சர்வதேச விண்வெளி மையத்தில் அமெரிக்கா,ரஷ்யா,கனடா,ஜப்பான்,பிரான்ஸ் மற்றும் இத்தாலி,ஸ்பெயின் போன்ற நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

சர்வதேச விண்வெளி மையத்தை கண்காணிப்பதுவிண்வெளி மையம் பூமிக்கு மிக அருகில் வராமல் இருப்பது உள்ளிட்ட முக்கிய பணிகளை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில்,

அமெரிக்கா ஒத்துழைப்பு தர மறுக்கும் நிலையில் 500 டன் எடை கொண்ட விண்வெளி மையம் இந்தியா,சீனா மீது விழும் அபாயம் உள்ளதாக ரஷ்யா விண்வெளித்துறை தலைவர் டிமிட்ரி ரோகொசின் ட்விட்டர் பக்கதில் தெரிவித்துள்ளார்.

 

‘டிமிட்ரி ரோகொசின்’ அவர்களின் ட்விட்டர் பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *