134 வாக்குகள் பெற்று இலங்கையின் புதிய இடைக்கால அதிபரானார் ரணில்….. முழுமையான விபரங்கள்!!

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம்(20/07/2022) இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று சிறிலங்காவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய நிலையில் பதில் அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.

எனினும்,

நேற்றைய தினம்(19/07/2022) வேட்பாளர்கள் தங்களது மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்தநிலையில்,

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போதே அதிக வாக்குகளை ரணில் பெற்றிருக்கிறார்.

வேட்பாளர் வாக்குகள்
ரணில் விக்ரமசிங்க 134
டலஸ் அழகப்பெரும 81
அனுரகுமார திஸாநாயக்க 03
செல்லுபடியற்ற வாக்குகள் 04
அழிக்கப்படாத வாக்குகள் 02

இலங்கை அரசியல் வரலாற்றில் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி

பிரதமராக நியமிக்கப்பட்டு பதில் அதிபராக பதவியேற்று தற்போது இடைக்கால அதிபராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று(20/07/2022) நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஆரம்பிக்கும் வரை

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாய கட்சி மற்றும் பொதுஜன பெரமுன மாத்திரமே வெளிப்படையாக ரணிலுக்கே வாக்கு என கூறியிருந்தந்தன.

 

ஆனால்,

டலஸ் அழகப்பெருமவுக்கே ஆதரவு என பல கட்சிகளில் இருந்து அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அதனால்,

டலஸ்க்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில்,

இறுதி நேர முடிவுகள் தலை கீழாக மாறி அதிக வாக்குகளை ரணில் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *