யாழ் – பருத்தித்துறையில் 21 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!

சகோதரியின் உயிர் இழப்பை தாங்கிக் கொள்ளாத இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பருத்தித்துறையை ஜெயக்குமார் பானுதன் எனும் 21 வயது இளைஞராவர்.

திருமண மண்டபம் ஒன்றில் வேலை பார்த்து வரும் மேற்படி இளைஞர் வேலை முடித்து நேற்று முன்தினம்(07/01/0/2023) சனிக்கிழமை நள்ளிரவு 11 மணியளவில் வீட்டிற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் ,

நேற்று ஞாயிற்றுக்கிழமை(08/01/2023) அதிகாலை ஒரு மணியளவில் கதவைத் திறந்து பார்த்த போது அவர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

அவரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக தெரிவிக்கப்படுட்டுள்ளது.

இதன்போது,

கொரோனா தொற்று காரணமாக சகோதரி ஒருவர் உயிரிழந்ததாகவும்

அவரின் சடலம் வீட்டுக்கு கொண்டு வராமல் நேரடியாக மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும்

அவர் அதனை எண்ணியே கவலை அடைந்து வந்ததாகவும் அயலவர் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மரண விசாரணை அதிகாரி சச்சிதானந்தன் சிவராசா விசாரணைகளை மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *