இலங்கைக்கு பெருந்தொகை நிதியை கொடுத்தது இந்தியா!
இலங்கைக்கு இந்திய அரசாங்கம் பெருந்தொகை நிதியை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியா, இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது.
இதில் 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றம் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆசிய கிளியரிங் யூனியன் செட்டில்மென்ட் கட்டமைப்பின் கீழ் செலுத்த திட்டமிடப்பட்ட மற்றொரு 500 மில்லியன் அமெரிக்க டொலர் இந்தியாவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.