புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் தனக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து அவருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வந்தனர்.
நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன்,விஜய் சேதுபதி, சௌந்தர ராஜா, சிம்பு ஆகியோர் பணவுதவி செய்தனர்.
சீக்கிரம் உடல் நலம் பெற்று வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.