உணவுப்பொதி மற்றும் தேனீரின் விலைகள் இன்று முதல் குறைக்கப்பட்டன!!
நாடளாவிய ரீதியில் உணவுப்பொதி மற்றும் தேனீரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(09/08/2022) முதல்,
இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய,
உணவு பொதி ஒன்றின் விலை 10 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
அத்துடன்,
தேனீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயு கொள்கலன்கள் விலை குறைக்கப்பட்டதையடுத்தே தாமும் இந்த விலை குறைப்பை மேற்கொள்வதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.