EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

போர்த்துக்கல் அணி மொராக்கோவிடம் காலிறுதியில் தோல்வி….. தனது பதவி விலகலை உத்தியோகபூர்மாக அறிவித்த பயிற்றுவிப்பாளர்!!

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பெர்னாண்டோ தனது பதவி விலகலை உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளார்.

கால்பந்தாட்ட உலகக்கிண்ண போட்டியின்(FIFA World Cup) காலிறுதி சுற்றில் போர்த்துக்கல் அணி மொராக்கோ அணியிடம் தோல்வியடைந்தது.

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் தோல்வி இந்த தோல்விக்கு காரணம் அந்த போட்டியில்

ரொனால்டோ 50 ஆவது நிமிடத்தில் களமிறக்கப்பட்டது தான் என சமூக வலைதளங்கள் ஊடாக ரசிகர்கள் குற்றம் சாட்டினார்கள்.

மேலும்,

அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் தனிப்பட்ட விரோதம் காரணமாக ரொனால்டோவை அந்த போட்டியில் முதலில் களமிறக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்கள்.

இதனால்,

போர்த்துக்களின் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அந்த அணியின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த பயிற்றுவிப்பாளர்,

“நான் ரொனால்டோவை வெளியில் அமர வைத்ததுக்கு வருத்தப்படவில்லை.

அவர் அணியில் விளையாடி இருந்தாலும் இதே நிலைமை தான் ஏற்பட்டிருக்கும்.

அதற்காக ரொனால்டோ திறமையான வீரர் இல்லை என கூறவில்லை.

போர்த்துக்கல் அணி நன்றாக விளையாடியது,

மொரோக்கோ அணி அதை விட நன்றாக விளையாடியது.”என கூறியுள்ளார்.

இவருடைய இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் கோவத்தை அதிகரித்தது.

இந்நிலையில்,

அவர் தனது பதவி விலகலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இது அவர் விரும்பி எடுத்த முடிவா? அல்லது வேறு யாராலும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதா? என கேள்விகள் எழுந்துள்ளன.

இதேவேளை,

68 வயதுடைய போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பெர்னாண்டோ போர்த்துக்கல் அணியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

One thought on “போர்த்துக்கல் அணி மொராக்கோவிடம் காலிறுதியில் தோல்வி….. தனது பதவி விலகலை உத்தியோகபூர்மாக அறிவித்த பயிற்றுவிப்பாளர்!!

  • I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *