சீனி மற்றும் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை – இன்னும் கிடைக்காத நுகர்வோர் விவகார அமைச்சு அனுமதி!!
அத்தியாவசியப் பொருட்களின் மீது கட்டுப்பாட்டு விலையை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இருப்பினும் இது தொடர்பில் விலைகள் நுகர்வோர் விவகார அமைச்சு இது வரை இறுதி முடிவு எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வேகமாக அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவேஅரசாங்கம் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரத் தீர்மானித்திருந்தது.
இந்த தீர்மானம் தொடர்பான பரிந்துரைகள் விலைகள் நுகர்வோர் விவகார அமைச்சின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டதன் அடிப்படையில். சீனி மற்றும் அரிசிக்கு உடன் அமுலாகும் வகையில், வகையில் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன நேற்று தெரிவித்தார்.
அதன்படி, ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சீனியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச சில்லறை விலையாக 130 ரூபா பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பொதிசெய்யாமல் விற்கப்படும் ஒரு சீனியின் அதிகபட்ச சில்லறை விலையாக 125 ரூபா பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, கீரி சம்பா கிலோ ஒன்றுக்கு 136 ரூபாவும், ஒரு கிலோ வெள்ளை சம்பா 101 ரூபாவும், ஒரு கிலோ வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையாக101 ரூபாவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெள்ளை (நாடு) அரிசி கிலோவொன்றின் அதிகபட்ச சில்லறை விலையாக 94 ரூபாவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.