14 வயது சிறுமி கிணற்றுள் வீழ்ந்து பலி!!
முல்லைத்தீவு – மாங்குளம் – புதிய கொலனி பகுதியில் கிணற்றுக்குள் வீழ்ந்து 14 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று(07/03/2022) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
வீட்டிற்கு அருகிலிருந்த கிணற்றுக்குள் வீழ்ந்தே சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் இன்று(08) இடம்பெறவுள்ளன.
வீட்டின் கிணற்றிற்கு அருகில் உள்ள கொய்யாமரத்தில் பழம்பறிக்க ஏறிய பாடசாலை மாணவி ஒருவர் மரத்தில் இருந்து தவறி கிணற்றிற்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாங்குளம் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்றுவரும் புதிய கொலணி மாங்குளத்தினைச் சேர்ந்த 14 அகவையுடைய தயாபரன் தர்மினி என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது உயிரிழப்பு தொடர்பில் மாங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எஸ்.சுதர்சன் சென்று பார்வையிட்டுள்ளதுடன் சடலம் தொடர்பில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.