யோகி பாபுவிற்கு அள்ளி குவியும் விருதுகள்!!
சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் யோகிபாபு, அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்திற்கு தற்பொழுதே விருது கிடைத்துள்ளது.
யோகிபாபு நடித்த மண்டேலா திரைப்படம் ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்திருப்பது அனைவரும் அறிந்த விஷயம்.
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் யோகிபாபுவின் அடுத்த திரைப்படத்திற்கும் விருது கிடைத்துள்ளது.
ஆம்,
யோகிபாபு அடுத்து நடிக்க உள்ள திரைப்படம் மீன் குழம்பு.
இத்திரைப்படத்தை சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்ற சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தின் இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் இயக்குகிறார்.
இத்திரைப்படத்தின் திரைக்கதை சிறந்த பிளாக் காமெடி திரைக்கதை என்ற விருதை பிர்சமுண்டா இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் வென்றுள்ளது.
திரைப்படம் உருவாவதற்கு முன்பே நடிக்க இருக்கும் படத்திற்கு விருது கிடைத்திருப்பது, படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.