பெற்றோருக்கு இடையிலான சண்டை….. 10 வயது மகன் உயிரிழப்பு!!

கணவன் மனைவி தகறாறு ஒன்றில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தென்னிலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

மாத்தறை – வெளிமாருவ பிரதேசத்தில் நேற்று இரவு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு ஒரு சிறுவனின் மரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தகராறில் மனைவியை கணவன் கொலை செய்ய முற்பட்ட போது சிறுவன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது கணவன் தொடர்பில் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு வழங்குவதற்காக மனைவி தனது 12 மற்றும் 10 வயது பிள்ளைகளுடன் உந்துருளியில் சென்ற போது இளுக்கெட்டிய பாலத்திற்கு அருகில் மறைந்திருந்த கணவன் மணைவியை கத்தியால் வெட்ட முற்பட்டுள்ளார்.

எனினும் உந்துருளியில் முன்பக்கமாக இருந்த 10 வயது சிறுவனின் தலையில் கத்தி பாய்ந்த நிலையில், சிறுவன் மொறவகாக கொஸ்நில்கொட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து கராபிடிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி சிறுவன் இன்று காலை 06.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்திற்கு காரணமான கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் 3 தடவைகள் திருமணமாகியுள்ளதுடன், குறித்த பெண்ணின் 2 ஆவது கணவனின் பிள்ளையையே இவ்வாறு 3 ஆவது கணவனால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்ததாக கூறப்படும் நபர் பர்ப்பள் ரேன்ஞ் (purple range) இசைகுழுவின் பாடகரான 44 வயதுடைய பிரசன்ன விக்ரமகே என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் வெளிவ பௌத்த மகாவித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி பயிலும் ஏகொட கமகே சதேவ் நெத்சர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

சடலம் மரண பரிசோதணைக்காக கராபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *