Online Video Game இற்கு அடிமையான சிறுவன் எடுத்த விபரீத முடிவு!!
15 வயது சிறுவன் ஒன்லைன் வீடியோ கேமுக்கு அடிமையானதால் அவனது பெற்றோர் சிறுவனிடமிருந்து மொபைல் போனை பறிமுதல் செய்ததால் விபரீத முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளான்.
மாத்தறை ரொட்டும்பா பகுதியில் வசிக்கும் பாடசாலை மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளான்.
இப்பகுதியில் உள்ள பல சிறுவர்கள் ஒரு குறிப்பிட்ட ஒன்லைன் வீடியோ கேமுக்கு அடிமையாக இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஒன்லைன் வழியாக நடத்தப்படுகின்றன.
இதன் காரணமாக சிறுவர்கள் மொபைல் போன்கள் அல்லது கணனிகளை தொடர்ந்து வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.