பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் திட்டத்தை முன்வைத்தால் பெருந்தொகை நிதி வழங்கப்படும்….. உலக வங்கி!!
பெருந்தொகை நிதியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னர் இந்த நிதியுதவியை உலக வங்கி வழங்கும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் செயலகத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
“சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் அடிப்படை விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது.
இலங்கைக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன.
இதனால்,
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் திட்டத்தை முன்வைக்க வேண்டும்,
அதன் பின்னர் அனைத்து நாடுகளிடமும் இருந்து நிதியுதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்”, எனக் குறிப்பிட்டுள்ளார்.