வியாழன் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை வெளியிட்ட நாசா….. பீட்சாவுடன் ஒப்பிட்டு பலரும் பகிர்வு!!
வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
இதில் வியாழன் கோளின் வடக்குப் பகுதியை உணவுப் பொருளான பீட்சாவுடன் ஒப்பிட்டு பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சூரிய குடும்பத்திலுள்ள வியாழன் கோள் மற்ற கோள்களைப் போன்று அல்லாமல், வளையங்களைக் கொண்டுள்ளது.
இதனால்,
நாசா தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில்,
வியாழன் கோளின் வடக்குப் பகுதியை வெப்பத்தைக் கொண்டு அளவிடும் முறையில் எடுக்கப்பட்ட காணொளியை நாசா பகிர்ந்துள்ளது.
அதில் வியாழன் கோளின் மேல்பகுதி பீட்சாவைப் போன்று இருப்பதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.
நாசாவின் Instagram பதிவை பார்வையிட இங்கே Click செய்க……
இதில் அதிகம் மஞ்சள் நிறத்திலுள்ள பகுதிகள், வியாழன் கோளின் ஆழமான பகுதிகள் என்றும், சிவப்பு நிறத்திலுள்ள பகுதிகள் வியாழன் கோளின் மேற்புறப்பகுதி எனவும் நாசா மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.