இன்று முதல் மின்வெட்டு….. இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!!
இன்று முதல் மின்வெட்டை நடைமுறைப்படுத்த நேரிடும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீர்த்தேக்கங்களில் நீரை சேமிப்பதற்காகவும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் நாளாந்த மின்வெட்டுக்கான காலம் நெருங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமைகள் குறித்து நேற்றைய தினம் விரிவாக ஆராயப்பட்டதாகவும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் கால அட்டவணை பெரும்பாலும் இன்று வெளியிடப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்உற்பத்தி நிலையங்களை அண்டிய நீர்நிலைகளின் நீரை சேமித்துக் கொள்ளும் நோக்கில் மின்சாரத்தை துண்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நீர் மின் உற்பத்தியை தொடர்ந்தும் முன்னெடுத்தால் விவசாயத்திற்கு நீர் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.