ரெட் கார்டா, கொரோனாவா – பிக்பாஸில் இருந்து நமீதா வெளியேறியதன் பின்னணி இதுதான்!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நமீதா, கடந்த வெள்ளிக்கிழமை திடீரென வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் நமீதா மாரிமுத்து என்கிற திருநங்கையும் ஒருவர். தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்துகொண்டது இதுவே முதன்முறை.
கடந்த வாரம் நடந்த டாஸ்கில் நமீதா மாரிமுத்து, தான் கடந்து வந்த கஷ்டங்கள் குறித்து பேசியது காண்போரை கண்கலங்க வைத்தது. இவ்வாறு முதல் வாரமே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நமீதா,
இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறினார்.
அவர் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறியதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
அவர் பிக்பாஸ் வீட்டில் தகராறு செய்ததால் ரெட் காட்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதாக தகவல் பரவி வந்தது.
அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் வெளியேற்றப்பட்டதாகவும் செய்திகள் வலம் வந்தன.
இந்நிலையில், நமீதா வெளியேறியதற்கான உண்மை காரணம் வெளியாகி உள்ளது.
அவர் மருத்துவ காரணங்களுக்காக தாமாக வெளியேறியதாக அவரின் நெருங்கிய தோழி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.