“பொன்னியின் செல்வன்” டப்பிங் ஸ்டூடியோவில் திரிஷா!!
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து உள்ளது.
கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.



இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகை திரிஷா வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாகவும், தற்போது அவர் டப்பிங் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் டப்பிங் ஸ்டூடியோவில் எடுத்த புகைப்படம் ஒன்றையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மங்காத்தா, மன்மதம் அம்பு உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடிகை திரிஷா சொந்த குரலில் டப்பிங் பேசி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்காக சொந்த குரலில் டப்பிங் பேசி வருகிறார் திரிஷா.
