நடு வீதியில் வாள்வெட்டு….. கணவன் உயிரிழப்பு – மனைவி படுகாயம்!!
காலி ஹிக்கடுவை, வேவல பிரதேசத்தில் உணவகம் ஒன்றுக்கு எதிரில் கணவன் மற்றும் மனைவி கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலில் கணவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கறுப்பு நிற காரில் வந்த மூன்று பேர் கணவன் மற்றும் மனைவியை கூரிய ஆயுதங்களால் வெட்டியுள்ளனர்.
சம்பவத்தில் ஹிக்கடுவை திராணகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார், இவர் சுற்றுலாத் தொழில் துறையில் ஈடுபட்டு வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த பெண் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் காரில் வந்த மூன்று பேர் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Your article helped me a lot, is there any more related content? Thanks!