தவெக கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்தார் விஜய்
தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்தார். பின்னர் 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை விஜய் ஏற்றினார்.
கட்சி கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சம் நிறமும் உள்ளது. கொடியின் நடுவில் வாகை மலர் இருக்க அதன் இருபுறமும் யானை உள்ளது. இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது.
கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்து இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விழாவின் துவத்தில் விஜய் உறுதிமொழி வாசிக்க கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.