சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கு இடையில் நடந்த பேச்சு வார்த்தைகள் சம்பந்தமான ஆவணங்கள் பிரதமரின் செயலகத்திலிருந்து மாயம்!!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் சம்பந்தமான பல கடிதங்கள், ஆவணங்கள் அடங்கிய கோப்புகள் பிரதமரின் செயலகத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.
பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க, பிரதமராக கடமையாற்றிய போது சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள்
பல சுற்றுப்பேச்சுவார்த்தை நடத்தி இருந்ததுடன் அவை தொடர்பான அனைத்து அறிக்கைகளும் பிரதமரின் செயலகத்தில் வைக்கப்பட்டிருந்தன என மேலும் அறியமுடிகிறது.