பாரிய மண் அகழ்வு திட்டம், எல்லை மீறிய காற்றாலை கோபுரங்கள் மற்றும் காடழிப்பு என பாரியளவில் அழிவுக்குள்ளாகும் மன்னர்….. அரசை சாடும் அருட்தந்தை!!
மன்னார் தீவில் ஏற்படவுள்ள மிகப்பெரிய அழிவுக்கு அரசு சம்மந்தப்படுகின்றதா என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் வினவியுள்ளார்.
மன்னாரில் நேற்று(09/12/2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு,
மன்னார் தீவு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறது.
அவற்றில் முக்கியமாக பாரிய மண் அகழ்வு திட்டம் மற்றும் எல்லை மீறிய காற்றாலை கோபுரங்கள் மற்றும் காடழிப்பு போன்றவை காணப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில்,
எனினும் மண் அகழ்வு தொடர்பாக பல்வேறு விடயங்களை முன்வைக்க விரும்புகின்றோம், மண் அகழ்வில் ஈடுபடுகின்ற தொழிற்சாலைகள் சம்மந்தமாக விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்காக அரச தரப்பில் பல்வேறு முயற்சிகளை கடந்த வருடம் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
ஆனால்,
அரச தரப்பிடம் இருந்து இது வரை எந்த விதமான பதில்களும் எமக்கு கிடைக்கவில்லை.
பல ஆண்டுகளாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் இவ் விடயம் தொடர்பாக வினவிய போதும் விளக்கம் கோரிய போதும் எவ்வித பதிலும் எமக்கு கிடைக்கவில்லை.
மேலும்,
மன்னார் பிரதேசச் செயலகத்திடமும் நாங்கள் பல்வேறு விதமான விளக்கங்களை கேட்டிருந்த போதும் எவ்வித பதிலும் எமக்கு வழங்கப்படவில்லை.
இவ்விடயம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக நாங்கள் தகவல்களை பெற்றுக்கொள்ள அரசை நாடினோம்.
விளக்கம் கோரி பல்வேறு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன.
ஆனால்,
இதுவரை அனுப்பப்பட்ட விண்ணப்பங்களுக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
மிகப்பெரிய அழிவுக்கு அரசும்,சம்மந்தப்படுகின்றதா………………………? என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும் எங்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
அவற்றை தெளிவாக நாங்கள் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.
29.12.2021 அன்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இதற்காக விளக்கம் கேட்டு நாங்கள் எழுதி இருந்தோம்” அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.