indiaLatestNews

இளம் பாடகி YOHANI இந்திய கலாசார தூதுவராக நியமனம்!!

“மெனிகே மகே இதே” பாடல் மூலமாக பிரபலமான பிரபல பாடகி யோஹானி டி சில்வாவை, இந்திய – இலங்கை புதிய கலாசாரத் தூதுவராக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் பெயரிட்டுள்ளது.

மூன்று மாத குறுகிய காலத்தினுள் முழு உலகையும் මැණිකේ මගේ හිතේ பாடல் மூலம் கவர்ந்த இலங்கை இளம் பாடகி YOHANI THE SILVA இலங்கை இந்திய கலாசார தூதுவராக நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் இந்தியத் தூதுவராலயம் இவருக்கு இந்த அந்தஸ்தை வழங்கி கெளரவித்துள்ளது.

YOHANI யை வெகுவாகப் பாராட்டியுள்ள இந்திய தூதரகம் இவரது பாடல் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் ஒலிப்பதாகவும் பிரபலங்கள் இப்பாடலை இரசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன் இலங்கை-இந்திய கலாசார பாரம்பரிய உறவுகளுக்கு இவரது பாடல் பிரவேசம்
மீள் பிரவேசத்தை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *