இன்று முதல் 8% வீதத்தால் குறைவடைந்தன விமான பயணச் சீட்டுக்களின் விலைகள்!!
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு அண்மைக்காலமாக அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரித்து வருகிறது.
அதிகளவான டொலரின் உள்வருகையால் ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,
விமான பயணச் சீட்டுக்களின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
இன்று(11/03/2023) முதல் பயணச் சீட்டுக்களின் விலை 8% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.