FEATUREDLatestNews

குருநாகல் எரிபொருள் நிலைய தீ விபத்தில் நால்வர் பலி

குருநாகல் (Kurunegala) எரிபொருள் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

குறித்த தீ விபத்து வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் நேற்று (07.04.2025) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

அத்துடன், இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை குருநாகல் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

மேலும், எரிபொருள் நிலையத்தில் உள்ள எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக குருநாகல் காவல்துறையின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.