இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் நலனுக்காக 30,000 அமெரிக்க டொலர்கள்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் நலனுக்காக பயன்படுத்துவதற்கு 30,000 அமெரிக்க டொலர்களை இலங்கை ஒதுக்கியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இதில் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து 20,000 அமெரிக்க டொலர்களையும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடமிருந்து 10,000 அமெரிக்க டொலர்களையும் இலங்கை ஒதுக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இப்போது நிகழும் யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் பட்டியலை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் இன்று (13) வெளியிட்டுள்ளது.

அதன்படி இஸ்ரேலில் காணாமல் போயுள்ள இரண்டு இலங்கையர்களை இன்னும் காணவில்லை என்றும் மேலுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் பதற்றத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து இலங்கை இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலில் சுமார் 8,000 இலங்கையர்கள் பணிபுரிகின்றனர், அவர்களில் 90 சதவீதம் பேர் முதியோர் இல்லங்களில் பராமரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள்.

காசா பகுதி மற்றும் லெபனான் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பதற்றம் நிலவினாலும், நாட்டின் பிற பகுதிகளில் இயல்பு நிலை நீடிப்பதால் இஸ்ரேலில் உள்ள இலங்கையர் குறித்து பதற்றமடைய வேண்டாம் என்றும் தூதர் தெரிவித்திருந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *