தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்தது உண்மை – அரசு மற்றும் ராணுவத்திற்கு எதிரான போராடத்தில் அவர் இறந்ததும் உண்மை….. பத்திரிகையாளர் சந்திப்பில் ஜனாதிபதி!!
“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒருவர் இருந்ததும் உண்மை,
அவர் இறந்து விட்டார் என்பதும் உண்மை” என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழினத்தின் உரிமைக்காக பயங்கரவாத வழியில் போராடியதால்
அவருக்கு எதிராக இலங்கை அரசு மற்றும் இலங்கை இராணுவம் போரிட்டன,
அதில் அவர் இறந்ததும் உண்மை.
இது தொடர்பில் மேலதிகமாகக் கூறுவதற்கு எதுவும் இல்லை” என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் எனவும்,
அவர் விரைவில் வெளிப்படுவார் எனவும்,
உலகத் தமிழ் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் அண்மையில் தெரிவித்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Your article helped me a lot, is there any more related content? Thanks! https://www.binance.info/uk-UA/register?ref=W0BCQMF1