FEATUREDLatestNewsTOP STORIES

இலங்கையில் கடந்த 7 நாட்களில் மாத்திரம் 51 படுகொலைச் சம்பவங்கள் பதிவு!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குள் மக்கள் சிக்கியுள்ள இக்கட்டான நிலைமையில் படுகொலைச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன.

நாட்டில் கடந்த 7 நாட்களில் (12/02/202318/02/2023) மாத்திரம் 51 படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மாகாணப் காவல்துறை உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட 7 நாட்களில் 3 சிறுவர்கள், 8 பெண்கள் உள்ளிட்ட 51 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

குடும்பத் தகராறு, தனிப்பட்ட தகராறு, காதல் விவகாரம், போதைப்பொருள் விற்பனைப் போட்டி மற்றும் குழு மோதல்களால் என மேற்படி படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அதற்கமைய,

வடமேல் மாகாணத்தில் 7 நாட்களில் 12 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

மேல் மாகாணத்தில் 9 பேரும் தென் மாகாணத்தில் 7 பேரும், மத்திய மாகாணத்தில் 3 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 2 பேரும், வட மத்திய மாகாணத்தில் 6 பேரும், ஊவா மாகாணத்தில் 5 பேரும், கிழக்கு மாகாணத்தில் 4 பேரும், வடக்கு மாகாணத்தில் 3 பேரும் என மொத்தமாக 51 படுகொலைகள் இடம்பெற்றுள்ளன என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *