FEATUREDLatestNewsTOP STORIES

இரு மாணவர்களின் உயிரை பறித்த கோர விபத்து!!

நேற்றையதினம் (03/07/2023) வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற இரு விபத்துகளில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஹுங்கம காவல்துறை பிரிவிற்குட்பட்ட ரகவா கஹதாவ வீதியில் தெற்கு கஹதாவ பகுதியில் மகிழுந்து மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் சாரதி தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

கஹடவ, ரன்ன பிரதேசத்தில் வசிக்கும் 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஹலவத்த – குருநாகல் வீதியில் ஹெட்டிபொல காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொலமுனுஓய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருநாகலில் இருந்து ஹலவத்தை நோக்கிச் சென்ற பேருந்தின் எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹெட்டபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குளியாபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில்

காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

ஹிலோகம நிகவெரட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துகள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *