LatestNews

ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது சரியில்லை!

ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது சரியில்லை நாங்கள் எந்த மதத்தை சார்ந்தாலும் எந்த மொழியை சார்ந்தாலும் நாங்கள் நல்ல ஒரு இணக்கப்பாடுடன் வாழ்வது முக்கியம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆண்டு இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் இரண்டாவது வருட நினைவு இரங்கல் செய்தியில் அவர் மேற்கண்டாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டு வருடங்களுக்கு முன்பாக பாஸ்கா திருவிழா அன்று குண்டு வெடிப்புக்களினால் பலர் இறந்து போனார்கள். அந்த குண்டுவெடிப்புகளில்  உயிரிழந்தவர்களை நாங்கள் இன்று விசேடமாக நினைவு கூருவோம். இரண்டு ஆண்டுகள் கடந்து போயிருந்தாலும் நாங்கள் எமது ஆலயங்களில் குறிப்பாக மன்னார் மறைமாவட்டத்தில் சரியாக காலை நேரம் 8.45 மணிக்கு கோயில் மணியை ஒலிக்கவிட்டு தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு மக்களை கேட்டிருக்கின்றோம்.

அந்த இரண்டு நிமிடங்களின் போது ஆலயங்களில் மக்கள் கூடி இருந்தால் அவர்கள் அந்த நேரத்தை செபிப்பது இந்த உயிர் திருவிழான்று எங்களுக்கு தெரியும் நாங்கள் விசேடமாக நினைவுகூரும் ஒரு சிறப்பான இயேசுநாதரின் கூற்றுதான் உயிர்ப்பும் உயிரும் நானே என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வார் என்ற அந்த வார்த்தைகள்.  அவர்களுடைய உயிர்களை இழந்தாலும் அவர்கள் என்றும் வாழ்வார்கள் என்று அவர்களுக்காக நாங்கள் செபிப்பது எமது கடமை.

அவர்களை இந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு இப்படியாக விஷேடமாக நினைவு கூறுகின்றோம். அது உண்மையிலேயே ஒவ்வொரு வருடமும் இடம்பெற வேண்டும். அவர்களை நாங்கள் மறந்துவிட முடியாது இப்படியாக குண்டு தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர்களை இன்னும் இனம் கண்டு கொள்ளவில்லை. அவர்களுக்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பதையும் இன்னும் சரியாக கண்டு கொள்ளவில்லை.

எனவே தான் எங்களுக்கு ஒரு நீதி அவசியம் அது யார் செய்தது எதற்காக செய்தார்கள் என்பதை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.  ஒரு இனம் என்னொரு இனத்திற்கு எதிராக செல்வது சரியில்லை நாங்கள் எந்த மதத்தை சார்ந்தாலும் எந்த மொழியை சார்ந்தாலும் நாங்கள் ஒரு நல்ல இணக்கப்பாட்டுடன் ஒற்றுமையாக வாழ்வது முக்கியம்.

ஒரு தவறை செய்தவரை மன்னிப்பது இயேசுவினால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு கட்டளை ஆகையினால் தான் நாங்கள் இப்படியான ஒரு பெரிய தவறு செய்தவரை கூட மன்னிக்க அழைக்கப்படுகின்றோம். ஆனாலும் எது உண்மை என்ன நடந்தது என்ற நீதியை நாங்கள் அறிந்து கொள்வது எங்களுக்கு மிகவும் முக்கியமாக இருக்கின்றது.

எனவே இந்த வருடம் அவர்களை விசேடமாக நினைவு கூர்ந்து அந்த நீதியை எதிர்பார்ப்போம் இவர்கள் தங்களது உயிரை இழந்ததன் வழியாக அவர்கள் இறைவனிடமிருந்து மென்மேலும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றும் மன்றாடிக்கொள்வோம் என அவர் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *