வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 12 வயது சிறுவன் பலி!!
பல்லம காவல்துறை பிரிவிற்குட்பட்ட கட்டுபொத்த பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்லம பகுதியில் வசிக்கும் 12 வயதுடைய சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் சிலாபம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்லம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.