விசேட வேலை விசா வழங்கவுள்ள பிரான்ஸ் அரசு!!

பிரான்சிற்கான விசா தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

பிரான்ஸின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 26 தொடங்கி ஓகஸ்ட் மாதம் 11வரை நடைபெறவுள்ள அதேநேரம்

பாராலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 28 தொடங்கி செப்டம்பர்  8 வரையும் நடைபெறவுள்ளன.

இந்த போட்டிகளில் சுமார் 15 ஆயிரம் தடகள வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த வீரர்கள் அனைவரும் 206 தேசிய ஒலிம்பிக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

அத்துடன்,

இவர்கள் 32 விளையாட்டுகளில் போட்டியிடவுள்ளனர்.

மேலும்,

26 ஆயிரம் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் இந்த போட்டிகளை செய்தியாக்கவுள்ளதுடன்

இதனை கண்டுகளிக்க சுமார் 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் தயாராகியுள்ளனர்.

இந்த நிலையில்,

பிரான்ஸ்க்கு பயணம் செய்வோருக்கான விசேட விசாக்கள் தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கம் அறிவிப்பொன்றை மேற்கொண்டுள்ளது.

இதன்படி,

ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் ஏனைய விளையாட்டுக்களில் பங்கேற்போருக்கு 90 நாள் வேலை விசா வழங்கப்படவுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழுவினரால் அங்கீகாரம் பெற்ற போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒலிம்பிக் தூதரகத்திலிருந்து ஷெங்கன் விசா மற்றும் அதனுடன் தொடர்புடைய அங்கீகார அட்டை வழங்கப்படவுள்ளது.

அத்துடன்,

ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் சாதாரண ஷெங்கன் விசாவுடன் போட்டிகளை கண்டு களிக்க பிரான்ஸ்க்கு செல்ல முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *